Sunday, February 4, 2018

உங்களிடம் சில வார்த்தைகள் கேட்டால் கேளுங்கள்



                              உங்களிடம் சில வார்த்தைகள் கேட்டால் கேளுங்கள்
                           -----------------------------------------------------------------------------------

முதலில் நான் ரசிக்குமொரு பாடலின் காணொளி  கேட்டால் கேளுங்கள்



உங்களிடம்  சில வார்த்தைகள்    கேட்டால் கேளுங்கள்
 ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் எனக்கு பிடிக்காத சொல் அட்வைஸ் அதிலும்  கேட்டால் கேளுங்கள் என்று சொல்வது இன்னும்  சிரமம்  யாராவது கட்டாயப் படுத்துகிறார்களாஎன்றால் யாரும் என்னைக் கட்டாயப்படுத்தமுடியாது நானொரு யுனிக் பெர்சனாலிடி  இருந்தும் எழுதுகிறேன் என்றால் தில்லையகத்து கீதா கேட்டுக் கொண்டதால்   இன்னொரு பதிவரும் கேட்டுக் கொண்டிருந்தார் ஆனால் என்னை ஏதோ சோதனை எலி மாதிரி கற்பனை செய்தது பிடிக்கவில்லை  உண்மையைச் சொல்லப்போனால் கோபம் வந்தது என்  கோபம்யாரை என்ன செய்துவிடும்   அது வீணென்று தோன்றியது
     நாமென்ன  செய்ய  என்றே
          
துவண்டாலும்- நலந்தரும்
          
சிந்தனைகள்  நம்மில்  வளர்க்க
          
செய்யும் செயல்கள் நலமாய்  இருக்கும்
.
          
ஊரைத்  திருத்த  உன்னால் முடியாது,
          
முடியும்  உன்னை  நீயே  மாற்ற
          (நீ  ஏமாற்ற  அல்ல.)
          எண்ணில்  சொல்லில் செயலில்
    
நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்

 
எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இ
என்று நான் எழுதி இருந்த புத்தாண்டுப் பிரமாணம் நினைவில் வந்தது இதுவும் ஒரு அறிவுரைதானே கேட்டால் கேளுங்கள்………………!
எனக்கு பொதுவாக அறிவுரைகள் பிடிக்காது என்மக்களுக்கே நான் வாழ்ந்து காட்டுவதே சிறந்தது என்று நினைத்திருக்கிறேன்   இருந்தாலும் அவ்வப்போது சில கோல் போஸ்டுகள்சொல்வதுண்டு  அவற்றில் சில---- விண்மீனை எட்ட முயற்சி செய் குறைந்த பட்சம் ஒரு மர உச்சியாவது எட்டலாம்---- தவிர்க்கப்பட முடியாதவை அனுபவிக்கப்பட்டே ஆகவேண்டும்----- எதையும் கேள்வி கேட்டு தெளிவடை இன்னும்  இதுபோல் பல உண்டு  கேட்டால் கேளுங்கள்……………..!
வாழ்வில் உயர்வு தாழ்வு காண்பது தவறு  எல்லோரும்  ஒரே போல்தான்  சிலரது கருத்துகள் இண்டாக்ட்ரினேட்  செய்யப்பட்டவையாய் இருக்கலாம்  கண்டு கொள்ளாதே உனக்கு சரியெனத் தோன்றுவதைச்சொல் செய்   ஆனால்மனசாட்சியை துணக்கழைக்காதீர்கள் ஏன்  என்றால் இந்தமனசாட்சிக்கு அளவு கோல் இல்லை என்பதே உண்மை
ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்  உன் சுதந்திரம்   அடுத்தவன்  மூக்கு நுனிவரைதான்  மறக்காதே  என் தந்தை எனக்குக் கூறியதும்  நினைவுக்குவருகிறது அடிக்கடிசொல்வார் துவண்டு விடாதே be bold and cheerful 
       
       சீயர்ஃபுல் ஆக இருக்கிறேனோ இல்லையோ போல்டாக இருக்க முயற்சி செய்கிறேன் இதுவும் அறிவுரைதான் கேட்டால் கேளுங்கள்
 எதைச் சொல்வதானாலும்   க்ரிஸ்பாகச் சொல்லுங்கள்  வழவழா வேண்டாமே நீட்டி முழக்கிச் சொன்னால்தான்   நம்முடைய ஞானம் தெரியும்  என்பது சரியா ஏதோ சொல்லிவிட்டேன் கேட்டால் கேளுங்கள்
இந்தமாதிரி தொடர்  பதிவுகள் ஏதோ கட்டாயத்தின் பேரில் எழுதப்படக் கூடாது ஆனால் நடை முறையில் அதுதான் நடக்கிறது நம்மை மதித்து கூப்பிடுகிறார்கள் எப்படி மறுப்பது என்றும் தோன்றலாம் எனக்கு முதலில் அப்படித்தான் இருந்தது என் செய்ய நானும் ஒரு சராசரிபதிவர்தானே
மறுப்பதை தவறாக எண்ணக் கூடாது  நான் யாரையும் இதைத் தொடர அழைக்கப்    போவதில்லை     என் மனதில் தோன்றியதை எழுதி விட்டேன்  கேட்டால் கேளுங்கள்...........!



      

40 comments:

  1. அதானே! கேட்டால் கேட்கட்டும். இல்லாட்டி நமக்கு என்ன? என்னையும் எழுத முதலில் ஏஞ்சலும் பின்னர் ஶ்ரீராமும் அழைத்திருந்தார்கள். எழுதவே இல்லையே! :)))))

    ReplyDelete
    Replies
    1. ////எழுதவே இல்லையே! :)))))//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதில பெருமை வேறாக்கும்:)) ஹா ஹா ஹா...

      Delete
    2. எழுதினால் ராமாயணத்தை விடப் பெரிசா ஆயிடும்! :)

      Delete
    3. @கீதா சாம்பசிவம்
      எழுதுவதா இல்லைய என்பது அவரவர் விருப்பம் யாரும் கட்டாயப்படுத்த முடியாது

      Delete
    4. அதிரா -- எழுத வில்லை என்று சொல்வதுபெருமையாகுமா

      Delete
    5. @கீதா சாம்பசிவம் அதுவும்சரிதான் நீளமாக எழுதினால் படிக்க ஆட்கள் வருவதுகுறையும்

      Delete
  2. எல்லாவற்றையும் சொல்லி விட்டு அடிக்கடி கேட்டால் கேளுங்கள் என்று சொன்னது பதிவின் சிறப்பான விடயமாக நான் நினைக்கிறேன் ஐயா.

    இருப்பினும் நல்ல புத்திமதிகள்தான் என்பது எனதசு கருத்து ஐயா

    நான் அடிக்கடி கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று நேற்றுகூட கேட்டேன் இதோ உங்களால் மீண்டும் கேட்டேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. தலைப்பை நினைவுபடுத்தும்வரிகள் அல்லவா

      Delete
  3. நல்ல பாடல் தேர்வு. ரசித்தேன்.

    இந்தத் தொடர் பதிவுனாலயும் நாம ஏதேனும் தெரிஞ்சுக்கலாம் இல்லையா?

    ஏன் 'மனசாட்சியைத் துணைக்கு அழைக்கக்கூடாது' என்று சொல்கிறீர்கள்? மனசாட்சி எப்போதும் உண்மை பேசுவதாலா?

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி மன சாசிஎன்பதுஇஷ்டத்துக்கு வளைக்கக் கூடிய ஒன்று பொதுஅளவுகோல் கிடையாது கொலைசெய்பவனும் திருடுபவனும் கூடக் கேட்டால் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்ததாகக் கூறுவான்

      Delete
  4. ஆஹா அருமையான அட்வைஸ்கள் ...

    ஹா ஹா ஹா நகைச்சுவைக்காக சொன்னதை இன்னமும் மனதில் காவிக்கொண்டு திரிகிறீங்கள்... :) நான் எல்லா இடத்திலும் அப்படித்தான் சொன்னேன் ஆனா எல்லோருக்கும் தெரியும் அது நகைச்சுவை என:))..

    அது உங்களைப் பாதித்திருந்தால் மன்னிச்சிடுங்கோ...

    இருப்பினும் பலர் தலைப்பை சற்று மாத்தி எழுதினார்கள்.. நீங்க மாற்றாமல் அப்படியே எழுதியிருக்கிறீங்க:)..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவின் பின்னூட்டத்திலேயே என் அதிருப்தியை கூறி இருந்தேன் உங்களுக்காக கீதா வக்காலத்து வாங்கினார் இந்த மறு மொழியிலும் ஒரு அட்வைஸ் கேட்டால்கேளுங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் முக்கியம் நகைச் சுவையாக எதை வேண்டுமானாலும் எழுதலாமா இப்போது கூடப் பாருங்கள் காவிக் கொண்டு திரிகிறீர்கள் இலங்கை தமிழில் திரிவதற்கு ஏதேனும் அர்த்தமுள்ளதா தெரியவில்லை நாம் சொல்லாத வார்த்தைகளின் எஜமான்

      Delete
  5. Replies
    1. இளைய ராஜாவின் பாடலாயிற்றே

      Delete
  6. மிகவும் பிடித்த பாடல்....

    என்னையும் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறார்கள். மூன்று வார காலம் பதிவுலகம் விட்டு விலகி இருந்ததால் எழுத இயலவில்லை.

    அட்வைஸ் - பலருக்கும் பிடிக்காத வார்த்தை தான்!

    ReplyDelete
    Replies
    1. அதிலும்கேட்டால் கேளுங்கள் என்பதுமிகவும் பிடிக்காதது வருகைக்கு நன்றிசார்

      Delete
  7. சிறப்பு..

    செம்மையான பதிவு.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிசார்

      Delete
  8. "ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும்
    எனக்கு பிடிக்காத சொல் அட்வைஸ்" என
    உறைப்பாகச் சொல்லிப் போட்டியள்!

    நாம்
    நல்லைதையே எண்ணி
    நல்லைதையே செயலாக்கி
    நல்லைதையே பகிரும் வேளை
    பிறர் அட்வைஸ் தேவையற்றதே!

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் தொடர் பதிவில் பங்கு கொள்ள அழைப்பு இருந்ததே

      Delete
  9. நீங்கள் சொன்னாலும், சொல்லா விட்டாலும், உங்கள் பதிவுகள் பெரும்பாலும் வாழ்வியல் சிந்தனைகள் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல சிந்தனைகள் என்றுநினைத்து எழுதுகிறேன்

      Delete
  10. //உனக்கு சரியெனத் தோன்றுவதைச்சொல் செய் //

    என் தந்தை எனக்கு சொன்னது இதை அடிக்கடி நானும் மகளுக்கு சொல்கிறேன்

    ஜனனி ...இளையராஜாவை அதிகமாக பிடிக்க காரணமான அற்புதமான பாடல்

    ReplyDelete
    Replies
    1. ஹெரிந்தோ தெரியாமலோ சில அட்வைசுகள் மனதில்பதிந்துவிடும்

      Delete
  11. சோதனை எலி ..//

    ஸார் இதை அதிரா அவர் மற்றும் நான் சாதாரணமாக உபயோகிக்கும் பதங்கள் ..நாங்க பொதுவாகவே இப்படி காமெடியாக எழுதும் பழக்கமுள்ளவர்கள் .இதை எழுதிய அவரும் ஏன் வாசித்தவுடன் நானுமே மறந்திட்டோம் ..நாங்கள் பொதுவாக அனைவரிடமும் காமெடியாக பேசிட்டு போயிடுவோம் .அதை இன்னமும் நினைவில் வைத்திருக்கிங்க என்பதே பதிவில் சொன்னபின்தான் தெரிஞ்சது ..சும்மா ஜாலிக்காக நகைச்சுவைக்காக தான் அதிரா சொன்னார்கள் அப்படி ..

    உங்கள் மீசையை பார்த்து பயந்து சில காலம் முன்வரை உங்கள்பக்கம் வராமலே இருந்தேன் :) எதுக்குன்னா நாங்க விளையாட்டா எதையும் சொல்ல சீரியஸாக ஆகிடும் என்ற பயத்தில்தான் .

    ReplyDelete
    Replies
    1. ///.நாங்க பொதுவாகவே இப்படி காமெடியாக எழுதும் பழக்கமுள்ளவர்கள் .இதை எழுதிய அவரும் ஏன் வாசித்தவுடன் நானுமே மறந்திட்டோம் //

      ஹா ஹா ஹா அதுதானே அஞ்சு:)...
      இல்லை ஒரு விசயம் பிடிக்கவில்லை எனில், அதை சொல்வதில் தப்பே இல்லை, அதை அப்பவே சொல்லி, கேட்டு திட்டிக்கூட இருக்கலாம், ஆனா அதன் பின்னர் ஜி எம் பி ஐயா நிறைய என்னோடு கொமெடியாகப் பேசியிருக்கிறார், கொமெடிக் கதைகூடப் போட்டிருக்கிறார்... ஆனா இதை மனதில் வைத்துக் கொண்டுதான் இத்தனையும் பண்ணினார் என்பதை நினைக்க ஒரு மாதிரி இருக்கு:)..

      “பகைமையை மனதில் அடக்கி வைத்தல், நேரடிப் போரை விடக் கொடியது”..

      Delete
    2. @ ஏஞ்செல் அதிராவுக்காக வக்காலத்து வாங்கும் உங்களபாராட்ட வேண்டும்போல் இருக்கிறது ஆனால் எல்லோரிடமுமெப்போதும்நகைச்சுவஎன்று கருதுவது சரி அல்லஎன்றேநினைக்கிறேன் விளையாட்டு என்று நினைப்பது சீரியசாக முடியலாமென்று தெரிந்தே அதைத் தொடரலாமா மீசையைப் பார்த்து பயம் என்பது நகைச்சுவையாகத் தெரிகிறதுஎனக்கு

      Delete
    3. @அதிரா உங்களை என்னவென்று நினைக்க மனதில் பட்டதைச்சொல்வது பகமையாகுமா வார்த்தகள் மிகவும் பொல்லாதவை கவனமாகக் கையாள வேண்டும்

      Delete
    4. பகைமையாகுமா வார்த்தைகள் என்று இருந்திருக்க வேண்டும் மேலே உள்ள மறு மொழியில்

      Delete
  12. அருமையான வாழ்வியல் சிந்தனைகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  13. அருமையான பாடல் பதிவு. எனக்கும் பிடித்த பாடல்.

    //விண்மீனை எட்ட முயற்சி செய் குறைந்த பட்சம் ஒரு மர உச்சியாவது எட்டலாம்---- தவிர்க்கப்பட முடியாதவை அனுபவிக்கப்பட்டே ஆகவேண்டும்---//

    நன்றாக சொன்னீர்கள்.
    வாழ்க்கைக்கு இந்த கருத்து ஒன்றே போதும் சார்.
    அன்பான வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி மேம்

      Delete
  14. பாடலுடன் பதிவும் அருமை கேட்டும் கொண்டோம் மனதில் ஏற்றியும் கொண்டோம்

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாமுங்கள் பதிவில் எழுதும் பின்னூட்டங்கள் வருவதில்லையே வருகைக்கு நன்றி சார்

      Delete
  15. தவிர்க்கப்பட முடியாதவை அனுபவிக்கப்பட்டே ஆகவேண்டும். அருமையானது. மனதில்ப் பதிந்தது. அப்படியே ஒவ்வொன்றும். நான் அதிகம் பின்னூட்டமிடுவதில்லையே தவிர அடிக்கடி படிப்பேன். நன்றி. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. மதிப்புக்கு உரியவர்கள் படிக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சிதானே வருகைக்கு நன்றி மேம்

      Delete
  16. யாருக்கும் தேவையில்லாமல் ஆலோசனையை வழங்குவது சரியல என்பார்கள். ஏனெனில் கோரப்படாத ஆலோசனையை (Unsolicited advice) யாரும் விரும்புவதில்லை. இருப்பினும் தங்களது அறிவுரைகள்/ஆலோசனைகள் பயனுள்ளவையாக இருக்கின்றன என்பது உண்மை.

    தொடர் பதிவு பற்றி நானும் எழுதியிருக்கிறேன். பழம் தானாக பழுக்கவேண்டும். புகை மூட்டம் போட்டோ அல்லது கார்பைட் கற்கள் வைத்தோ பழுக்க வைத்தால் அது எப்படி சுவையும் இல்லாமல், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்குமோ அது போல் வற்புறுத்தி எழுதவைக்கும் பதிவுகள்/ கதைகள் பெரும்பாலும் உப்பு சப்பில்லாமல் இருக்க வாய்ப்புண்டு.

    ReplyDelete
    Replies
    1. மனதில் தோன்றியதை எழுதி விட்டேன் தலைப்பு கோருவ்துபோல் கேட்டால் கேட்கட்டும் வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  17. பாட்டு நல்ல பாட்டுதான். பலமுறை கேட்டுருக்கேன். ஆனால்.... ஒரு சின்ன எண்ணம் இருக்கு. அதை சொல்லப்போக இவள் பெருசா சொல்லவந்துட்டான்னு வசை கேட்க வேண்டி வருமோன்னு சொல்லலை.....

    ReplyDelete